காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை ருசித்து தின்ற யானைகள்
காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை யானைகள் ருசித்து தின்றன.
தாளவாடி
காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை யானைகள் ருசித்து தின்றன.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்கிருந்து வெளியேறும் யானைகள் சாலையோரம் வீசப்பட்டு கிடக்கும் கரும்புதுண்டுகளை ருசித்து பழகிவிட்டன.
இதனால் யானைகள் ஆசனூர் சாலையில் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. கர்நாடகம் மற்றும் தாளவாடியில் இருந்து லாரிகளில் கரும்புகள் ஏற்றி வரும் டிரைவர்கள் அவற்றை காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வீசி செல்வதால் யானைகள் அங்கு தினமும் கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் உள்ளது.
கரும்புகளை ருசித்தன
அதன்படி ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் முகாமிட்டன. பின்னர் அங்கு கிடக்கும் கரும்புகளை ஹாயாக ருசித்து தின்றன. சாலையோரம் யானைகள் முகாமிட்டதால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை கண்டு அச்சமடைந்தனர்.
சோதனை சாவடியில் பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் யானைகள் அருகே வாகனங்களை நிறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினர். 2 மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன.