காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்


காட்டுமன்னார்கோவில் அருகே  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே எய்யலூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 48). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதேஊரை சேர்ந்த 3 பேருடன் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது சங்கரன் மீன்பிடித்தபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவருடன் சென்றவர்கள் சங்கரனை ஆற்றில் இறங்கி தேடியதோடு, இதுபற்றி காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி நேற்று காலை 11 முணி முதல் மாலை 6 மணி வரை சங்கரனை தீவிரமாக தேடினர். இருப்பினும் மாயமான சங்கரனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு இருள் சூழ்ந்ததால், தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை நிறுத்தினர்.


Next Story