கவுந்தப்பாடி அருகே பெரிய மாரியம்மன் கோவில்முடிகாணிக்கை ஏலம் ஒத்திவைப்பு
கவுந்தப்பாடி அருகே பெரிய மாரியம்மன் கோவில் முடிகாணிக்கை ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம், பெரிய மாரியம்மன் கோவிலில் முடிகாணிக்கை சேகரித்துக்கொள்ளும் பொது ஏலம் கோவில் அறங்காவலர் சடையப்பன் தலைமையில் நடந்தது. இதனை இந்துசமய அறநிலைய துறை அதிகாரியும், கோவில் ஆய்வாளருமான நித்தியா தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பி.மேட்டுப்பாளையம் முடி திருத்தும் தொழிலாளர்கள், ஏலத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யாவிடம் மனு கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பொது ஏலம் வருகிற 25-ந் தேதி அன்று நடத்தப்படும் என ஏலத்தை தள்ளி வைத்தார்.
Related Tags :
Next Story