கே.என்.பாளையம் அருகேரோட்டை கடந்த சிறுத்தைப்புலி
கே.என்.பாளையம் அருகே சிறுத்தைப்புலி ரோட்டை கடந்தது
ஈரோடு
டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் பகுதியில் இருந்து கடம்பூர் மலைக்கிராமத்துக்கு காரில் ஒருவர் கே.என்.பாளையம்-கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சற்று தூரத்தில் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் சிறுத்தைப்புலி கடந்து சென்றதை பார்த்தார். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுத்தைப்புலியை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.
இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கே.என்.பாளையம்-கடம்பூர் சாலையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story