கோபி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகப்பாம்பு குட்டி பிடிபட்டது
கோபி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகப்பாம்பு குட்டியை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்
ஈரோடு
கோபி அருகே உள்ள மேட்டுவலவு சுப்பணன் வீதியை சேர்ந்தவர் ராஜா. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு. நேற்று காலை ராஜா வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டில் மஞ்சு மற்றும் உறவினர்கள் இருந்து உள்ளனர். அப்போது அவர்களுடைய குடியிருப்பு பகுதிக்கு 1 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு குட்டி வந்ததை கண்டதும் அவர்கள் அச்சம் அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகப்பாம்பு குட்டியை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு குட்டியை அங்குள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story