கோபி அருகே கிளை வாய்க்காலில் உடைப்பு பெரும் சேதம் தவிர்ப்பு


கோபி அருகே   கிளை வாய்க்காலில் உடைப்பு   பெரும் சேதம் தவிர்ப்பு
x
தினத்தந்தி 22 Nov 2022 1:00 AM IST (Updated: 22 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெரும் சேதம் தவிர்ப்பு

ஈரோடு

கோபி அருகே உள்ள உக்கரம் மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து கக்ரா குட்டை கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த கிளை வாய்க்காலில் மதகு அமைக்கப்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிய தொடங்கியது. நேற்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் அதை பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து கீழ்பவானி வாய்க்கால் பாசன துறை அதிகாரிகள் பணியாளர்களுடன் சென்று மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரிசெய்தனர். பெரிய அளவில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு இருந்தால் மில்மேடு, கருப்பராயன் கோவில், கக்ராகுட்டை, குள்ளம்பாளையம், கொத்துக்காடு, அரசூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்களும், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

உடனடியாக உடைப்பு சரி செய்யப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story