கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் இறந்தாா்
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாய்க்காலில் குளித்த மாணவர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கோவில்புதூரை சேர்ந்தவர் சுந்தரம். அவருடைய மகன் கிஷோர் (வயது 15). இவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கே.வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்று கோபி அருகே உள்ள உக்கரம் குப்பன் துறை கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். பின்னர் 6 பேரும் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.
சத்தியமங்கலம் அருகே நீர்கசிவு காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் மட்டுமே சென்றதால் வாய்க்காலின் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனை அறியாமல் ஆழமான பகுதியில் இறங்கி கிஷோர் குளித்து கொண்டிருந்தார்.
மூழ்கி சாவு
திடீரென கிஷோர் வாய்க்காலில் மூழ்க தொடங்கினார். இதனால் "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரல் எழுப்பினார். சத்தம் கேட்டு நண்பர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாய்க்காலில் இறங்கி கிேஷாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கிேஷார் பிணமாக மீட்கப்பட்டார்.
சோகம்
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிேஷாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.