கோபி அருகே ஓடும் அரசு பஸ்சில் டயர் வெடித்ததால் பரபரப்பு: பயணிகள் உயிர் தப்பினர்
கோபி அருகே ஓடும் அரசு பஸ்சில் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உயிர் தப்பினர்
ஈரோடு
கோபியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 36 பேர் பயணித்தனர். பாலகிருஷ்ணன் என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். ரவிக்குமார் என்பவர் கண்டக்டராக இருந்தார்.
கோபி அருகே கோவை பிரிவு என்ற இடத்தில் சென்றபோது பஸ்சின் இடது பக்க முன் டயர் திடீரென வெடித்தது. உடனே டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதைத்தொடர்ந்து வேறு ஒரு அரசு பஸ் வரவழைக்கப்பட்டு, அதில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓடும் அரசு பஸ்சில் திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story