கொடுமுடி அருகே பகவதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி


கொடுமுடி அருகே  பகவதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
x

பகவதி அம்மன் கோவில்

ஈரோடு

கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தில் மிகவும் பழமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இன்று (வியாழக்கிழமை) முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், பின்னர் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story