கொடுமுடி அருகேகார் கவிழ்ந்து டிரைவர் பலிதாத்தா- பேத்தி உயிர் தப்பினர்


கொடுமுடி அருகேகார் கவிழ்ந்து டிரைவர் பலிதாத்தா- பேத்தி உயிர் தப்பினர்
x

கொடுமுடி அருகே கார் கவிழ்ந்து டிரைவர் பலியானாா் தாத்தா- பேத்தி உயிர் தப்பினர்

ஈரோடு

கொடுமுடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார். இந்த விபத்தில் காரில் வந்த தாத்தா மற்றும் அவருடைய பேத்தி உயிர் தப்பினர்.

கார் டிரைவர்

நாமக்கல்லை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 70). கார் டிரைவர். இதேபோல் நாமக்கல்லை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய பேத்தி தாரணி. பரமசிவத்துக்கு உடல் நலம் சரியில்லை.

இதனால் பரமசிவத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவருடைய பேத்தி தாரணி அழைத்து செல்ல விரும்பினார். இதையடுத்து சுப்புராயனின் காரில் பரமசிவத்தை அழைத்துக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தார்.

சாவு

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த பெருமாள்கோவில் புதூர் அருகே நேற்று காலை 6 மணி அளவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரத்தில் கார் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் சுப்புராயன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்புராயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் பரமசிவம், தாரணி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story