கொடுமுடி அருகே மரத்தில் வேன் மோதி தொழிலாளி பலி; மனைவி உள்பட 6 பேர் படுகாயம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்


கொடுமுடி அருகே மரத்தில் வேன் மோதி தொழிலாளி பலி; மனைவி உள்பட 6 பேர் படுகாயம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 21 Jun 2023 2:48 AM IST (Updated: 21 Jun 2023 7:48 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே மரத்தில் வேன் மோதி தொழிலாளி பலி; மனைவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனா்.

ஈரோடு

கொடுமுடி அருகே மரத்தில் வேன் மோதியதில் ெதாழிலாளி பலியானார். மனைவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாமி கும்பிட சென்றனர்

அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடலை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவருடைய மனைவி நந்தினி (34). இவர்களுடைய மகள் மித்ரா (8), மகன் சாய் மகிழன் (5). கண்ணன் வெளிநாட்டில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் கண்ணன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட விரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு ஆம்னி வேனில் சென்றார். கண்ணனுடன், அவர்களுடைய உறவினர்களான சாந்தி (59), இவருடைய மகன் சதீஷ்குமார் (31), இவரின் மனைவி சவுமியா (27) ஆகியோரும் சென்றனர்.

சாவு

திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர். வேனை கண்ணன் ஓட்டினார். கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் நால்ரோடு சின்னம்மாபுரம் அருகே நேற்று இரவு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனின் முன்புறம் அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் வேனில் வந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 7 பேைரயும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். மற்ற 6 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story