கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்


கோத்தகிரி அருகே  குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:30 AM IST (Updated: 10 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா கிராம குடியிருப்புப் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தையால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா கிராம குடியிருப்புப் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தையால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

கோத்தகிரியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நெடுகுளா ஒசட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் சுண்டட்டி உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளன. இந்தநிலையில் நெடுகுளா ஒசட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளது. சிறுத்தை இரவு நேரங்களில் உலா வரும் காட்சி அங்குள்ள ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், நெடுகுளா பகுதியில் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் ஏராளமான தேயிலைத் தோட்டங்களை விலைக்கு வாங்கி அதனைப் பராமரிக்காமல் விட்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்

எனவே இந்த தோட்டங்கள் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து வனவிலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளது. இங்கு காட்டெருமைகள், கரடிகள் மற்றும் சிறுத்தைகளும் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு உலா வரும் வன விலங்குகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் வன் விலங்குகளின் நடமாட்டதைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட தோட்டங்களின் உரிமையாளர்களிடம் புதர் செடிகளை வெட்டி அகற்ற அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story