கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் திருவிழா
கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் திருவிழா நடைபெற்றது.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் விழா நடைபெற்றது.
ஆடிபடையல் திருவிழா
கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மதுரைவீரன் சுவாமி கோவிலில் மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஆடி படையல் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த படையல் விழா நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு படையல் விழா நேற்று நடைபெற்றது.
இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற 100-க்கும் மேற்பட்ட சேவல்களை படையலுக்காக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயம் செழிக்கும்
பின்னர் சேவல் கறியுடன் மொச்சைப்பயறு கலந்து சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படையலிட்டனர். இந்த ஆடிபடையல் விழாவில் பெண்கள் சாமி தரிசனம் செய்யவும் சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை உண்பதற்கும் அனுமதி கிடையாது.
இந்த ஆடிப்படையல் விழாவால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதியினரின் நம்பிக்கை.