கோவில்பட்டி அருகே ரூ.20 கோடியில் பேவர்பிளாக் சாலைகள் திறப்பு


கோவில்பட்டி அருகே   ரூ.20 கோடியில் பேவர்பிளாக் சாலைகள் திறப்பு
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ரூ.20 கோடியில் பேவர்பிளாக் சாலைகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் பாண்டவர் மங்கலம் பஞ்சாயத்து காமராஜர் நகர் மற்றும் பாலாஜி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.19.97 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகள் முடிவடைந்த சாலைகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ராஜூவ் நகர் 3-வது தெருவில் மேல்நிலை தொட்டியில் ஆழ்குழாய் கிணறு, குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.


Next Story