கோவில்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த முதியவர் மீட்பு


கோவில்பட்டி அருகே   கிணற்றில் தத்தளித்த முதியவர் மீட்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த முதியவர் மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இளம்புவனம் பஞ்சாயத்தை சோ்ந்த நாயக்கன்பட்டியை ேசர்ந்தவர் நல்லப்ப நாயக்கர் (வயது 90). விவசாயி. இவருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் கண்ணன் (வயது 46) என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். தற்போது இவர் மனைவி லட்சுமி அம்மாள், மகன் கண்ணன் ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகின்றனர்.

நேற்று வீட்டில் வளர்த்து வந்த கோழி ஒன்று இவருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்துவிட்டது. அதை மீட்பதற்காக நல்லப்ப நாயக்கர் கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் படிகள் இல்லாத தால் வெளியே வரமுடியாமல் தத்தளித்த, அவர் கூச்சலிட்டார். இதை பார்த்த குடும்பத்தினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் வீரர்கள் கிணற்றில் தத்தளித்த நல்லப்ப நாயக்கரையும், கோழியையும் பத்திரமாக மீட்டனர்.


Next Story