குலசேகரன்பட்டினம் அருகேகார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மெக்கானிக் படுகாயம்
குலசேகரன்பட்டினம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டவிபத்தில் மெக்கானிக் படுகாயம் அடைந்தார்.
குலசேகரன்பட்டினம்:
அரியலூர் மாவட்டம் செங்கராயன் கட்டளை ஏலாக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் குலசேகரன்பட்டினம் கல்லாமொழி அனல்மின்நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் தன்னுடன் வேலை பார்க்கும் அர்ஜின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குலசேகரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரமேஷ் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரைமீட்டு திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த நெல்லை டவுண் காவடிபிறைத்தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.