குள்ளஞ்சாவடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


குள்ளஞ்சாவடி அருகே  தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

குள்ளஞ்சாவடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

குள்ளஞ்சாவடி,

குள்ளஞ்சாவடி அருகே உள்ள அப்பியம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வேலுச்சாமி(வயது 35). இவர், கடந்த சில நாட்களாக சோகமாக இருந்தார். இந்த நிலையில் ராஜமாணிக்கம் என்பவரது முந்திரி தோப்பில் வேலுச்சாமி தூக்குப்போட்டுக்கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story