குப்பாண்டபாளையம் பெருமாள் கோவில்புதூர் அருகேமயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
ஈரோடு
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் தாசில்தார் தாமோதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பெருமாள் கோவில் புதூர் அருகில் கடந்த 70 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கைகாட்டி, காமராஜர் புரம், கரட்டூர் மேடு, பெருமாள் கோவில் புதூர் ஆகிய பகுதிகளை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி அவர்களிடம் இருந்து மயானத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி சிவசங்கரனிடமும், ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டு்ள்ளது.
Related Tags :
Next Story