மயிலாடும்பாறை அருகேமாவட்ட அளவிலான கபடி போட்டி


மயிலாடும்பாறை அருகேமாவட்ட அளவிலான கபடி போட்டி
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி பகல்-இரவு என 2 நாட்கள் நடக்கிறது. இதில் தேனி, கம்பம், சின்னமனூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரம், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த வீரர்கள் மற்றும் அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.


Related Tags :
Next Story