மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருேக வெள்ளாளன்விளை சீரணிச்சாலையைச் சேர்ந்த யோக நாடார் மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 40). மாற்று திறனாளியான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோ தண்டுபத்து அருகில் வந்தபோது நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே ஓடியது. இதனால் திடீர் பிரேக் போட்டுள்ளார். அப்போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஸ்டீபன் ராஜை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஸ்டீபன்ராஜ் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story