மெஞ்ஞானபுரம் அருகேதோட்டத்துக்கு மர்ம நபர்கள் தீவைப்பு


மெஞ்ஞானபுரம் அருகேதோட்டத்துக்கு மர்ம நபர்கள் தீவைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே தோட்டத்துக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் எஸ். வளைவில் கிருஷ்ணபாண்டி, ஹென்றிநோபுள், ஆழ்வார் ஆகியோரின் தோட்டங்களில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து ெசன்று தீயை அமைத்தனர். இந்த தீவிபத்தில் தென்னை, பனை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் சாம்பலாகின. மர்ம நபர்கள் தோட்டங்களுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story