மொடக்குறிச்சி அருகே வெள்ளைப்பாறை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா
பொங்கல் திருவிழா
ஈரோடு
மொடக்குறிச்சி 46 புதூர் அருகே நொச்சி காட்டுவலசில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான வெள்ளைப்பாறை முனியப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.இதைத்தொடர்ந்து அன்று மாலை கரகம், தீர்த்தம் எடுக்க காவிரி செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று மாலை வெள்ளைப்பாறை முனியப்பசாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் மறுபூஜை நிகழ்ச்சியுடன் பொங்கல் திருவிழா முடிவடைகிறது.
Related Tags :
Next Story