மொடக்குறிச்சி அருகே2 கோவில்களுக்கு சொந்தமான 34½ ஏக்கர் நிலம் மீட்பு
மொடக்குறிச்சி அருகே 2 கோவில்களுக்கு சொந்தமான 34½ ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது
ஈரோடு
மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பொன்மலை குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 22.92 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதேபோல் குலவிளக்கு கிராமத்தில் உள்ள கோபால பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 11.75 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நிலத்தையும் மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 2 கோவில்களுக்கு சொந்தமான 34½ ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டன. மேலும் அங்கு கோவில்களுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story