முதலூர் அருகேகாசநோய் ஒழிப்புசிறப்பு மருத்துவ முகாம்
முதலூர் அருகே காசநோய் ஒழிப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தட்டார்மடம்:
முதலூர் அருகே சுப்பராயபுரம், சவுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் காசநோய் ஒழிப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்திற்கு பொதுமக்களை வரவழைத்து 36 நபர்களுக்கு நெஞ்சக பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மேலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று 827 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 நபர்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்பட பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமை சுப்பராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புதுரை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் செல்லப்பாண்டியன் ஊர் தலைவர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார்.
இப்பணியில் எம்.எல்.ஹெச்.பி.செவலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தேசிய காசநோய் ஒழிப்பு பணியாளர்கள், ஆஷா மற்றும் மஸ்தூர் பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவக் குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், காசநோய் மேற்பார்வையாளர் சங்கிலி ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.