முத்தையாபுரம் அருகேசிறுவர், சிறுமி மீது தாக்குதல்
முத்தையாபுரம் அருகே சிறுவர், சிறுமி மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சூசைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் விஜயகுமார் (வயது15). இவர் சூசைநகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த அருள் மகன் செல்வேந்திரன் மற்றும் முத்தையா மகன் ரூபன் ராஜ் ஆகிய 2 பேரும் விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்தையாபுரம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் வழக்கு பதிவு செய்தார்.
மேலும் இதே போல முத்தையாபுரம் சூசைநகர் பகுதியை சேர்ந்த அனீஸ் மகள் திவ்யலட்சுமி (6) என்பவரையும் கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.