நாலாட்டின்புத்தூர் அருகேவாகனம் மோதி ஒருவர் சாவு
நாலாட்டின்புத்தூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
நாலாட்டின்புத்தூர்:
கோவில்பட்டி மில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 53). திருமணமாகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவரது தாயார் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் கோவில்பட்டியில் உள்ள தனது தம்பியான செல்வன் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் கருங்காலிபட்டி பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.