நாலாட்டின்புத்தூர் அருகேமக்களை அச்சுறுத்திய மாடு பிடிபட்டது
நாலாட்டின்புத்தூர் அருகே மக்களை அச்சுறுத்திய மாடு பிடிபட்டது
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது60). விவசாயியான இவரது பசு மாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது இதனால் அந்த பசு மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு தெருவில் கட்டுப்பாடின்றி அங்கும் இங்கும் ஓடியவாறு பொதுமக்களை முட்டி காயப்படுத்தி வந்தது. அந்த மாட்டை உரிமையாளராலும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் நேற்று கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையில் மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி மாட்டை லாவகமாக மடக்கி பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மாடு பாதுகாப்பாக கட்டி போடப்பட்டது.
Related Tags :
Next Story