நம்பியூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
நம்பியூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
ஈரோடு
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள குதிரைக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). விவசாயி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது தோட்டத்தின் கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்துவிட்டது. அந்த கிணற்றில் 80 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனால் புள்ளிமான் தத்தளித்துக்கொண்டு இருந்தது. நேற்று காலை சுப்பிரமணியம் கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சத்தம் வரவே உள்ளே எட்டிப் பார்த்த அவர் மான் ஒன்று தண்ணீரில் நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நம்பியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி புள்ளி மானை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட புள்ளிமான் டி.என்.பாளையம் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story