நம்பியூர் அருகே அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை


நம்பியூர் அருகே   அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகை
x

நம்பியூர் அருகே அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனா்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்பில் 3 மாதமாக விவசாய பாடப்பிரிவுக்கு வகுப்புகள் நடந்து வந்தது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் இனி விவசாய பாடப்பிரிவு நடைபெறாது என மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள் மற்றும் தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் பெற்றோரிடம், இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இது குறித்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். பெற்றோர் இதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார்கள்.


Next Story