நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை


நம்பியூர் அருகே   கீழ்பவானி வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
x

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வாய்க்காலில் குதித்தார்

நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவருடைய மனைவி பிரியா (35). மகன்கள் நவீன் (14), முகின் (12).

ரமேஷ் கோவையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி காலை 6 மணி அளவில் பிரியா தனது வீட்டின் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். பின்னர் தன்னுடைய செல்போனை கரையிலேயே வைத்துவிட்டு வாய்க்காலில் குதித்துவிட்டார். இதுகுறித்து உடனே நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி பிரியாவை தேடினர். ஆனால் 3 நாட்களாக அவர் கிடைக்கவில்லை.

குடும்ப தகராறு

இந்த நிலையில் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதியில் பிரியாவின் உடல் மிதந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிரியா குடும்ப தகராறு காரணமாக வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


Related Tags :
Next Story