ஊஞ்சலூர் அருகேபகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா


ஊஞ்சலூர் அருகேபகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
x

குண்டம் திருவிழா

ஈரோடு

ஊஞ்சலூர் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பொங்கல், குண்டம் திருவிழா கடந்த 27-ந் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 31-ந் தேதி காலை காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். அதன்பின்னர் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் ஊஞ்சலில் வைத்து ஆராட்டு விழாவும் நடைபெற்றது. நேற்று நடந்த மறுபூஜையுடன் திருவிழா முடிவடைந்தது.


Next Story