ஓட்டப்பிடாரம் அருகேமாட்டுவண்டி பந்தயம்


ஓட்டப்பிடாரம் அருகேமாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஆயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்- புளியம்பட்டி சாலையில் நடந்தது. போட்டிக்கு அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். பெரிய மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் கமலா வண்டி இரண்டாவது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் நெல்லை வி.எம்.சத்திரம் பாலன் வண்டி முதலிடத்தையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி இரண்டாவது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து குதிரை வண்டி பந்தயத்தில் 7 கவண்டிகள் பங்கேற்றன. போட்டியை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அவலாபேரி பாண்டி தேவர் குதிரை வண்டி முதலிடத்தையும், வள்ளியூர் ஆனந்த தேவர் வண்டி இரண்டாவது இடத்தையும், நெல்லை டவுன் கோகுலம் குதிரை வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.


Next Story