ஓட்டப்பிடாரம் அருகேபூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகேபூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே 18 ஆண்டுகளுக்கு பின் மனைவி கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருடன் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறில் மனமுடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை ெசய்து கொண்டார்.

விவசாயி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓம் சரவணபுரம் கிராமத்தை சேர்ந்த நீதிராஜ் மகன் பாலமுருகன் (வயது 40). விவசாயி. இவரது மனைவி ஜெயக்குமாரி. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.

குழந்தை இல்லாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி பாலமுருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து மது குடித்து வந்ததால், மதுவுக்கு அவர் அடிமையாகி விட்டாராம். இதை தொடர்ந்து அவரை மனைவியும், உறவினர்களும் அவரை கயத்தாறு அருகிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை முடிந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு வந்து தோட்டத்து வேலைகளை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவியும் கர்ப்பிணி ஆகியுள்ளார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

மனைவியுடன் வாய்த்தகராறு

இந்த நிலையில் நேற்று காலையில் பாலமுருகன் தனது தோட்டத்தில் பருத்தி எடுக்க சென்றுள்ளார். அவருடன் ஜெயகுமாரியும் ெசன்றுள்ளார். இருவரும் பருத்தி எடுத்து கொண்டிருந்த நிலையில், கர்ப்பிணியாக இருப்பதால் ஜெயக்குமாரி பருத்தி எடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இதனால் பருத்தி எடுக்காமல் வீட்டுற்கு சென்று ஓய்வு எடுக்குமாறு மனைவியை பாலமுருகன் வலியுறுத்தி உள்ளார். இதை கேட்காமல் அவர் பருத்தி எடுத்ததால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலமுருகன் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை பாலமுருகன் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த ஜெயக்குமாரி, கணவர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாலமுருகனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட அவரது மனைவி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story