ஓட்டப்பிடாரம் அருகேரேஷன்அரிசி கடத்தியவாலிபர் கைது


தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே ரேஷன்அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாநத்தம் கிராமத்தில் புதியம்புத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும், மோட்டார் சைக்கிள் விட்டு விட்டு தப்பி ஓடினர். போலீசார் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டையை கைப்பற்றிய போலீசார், கிராமத்துக்குள் சென்றபோது, காரில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த கன்னியாகுமரி பூதப்பாண்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனீஸ் (25) என்பவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த காரில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனீஸை கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் ெசய்த போலீசார், தப்பி ஓடிய வாலிபரை தேடிவருகின்றனர்.


Next Story