பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை- தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு


பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை-  தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு
x

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்


பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானைகள் புகுந்தது

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைதோட்டம் ரேஞ்ச் எண் 2 பால்வாடி லைன்ஸ் ஒற்றைலைன்ஸ் உள்பட பல பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் துரத்தி வருகிறது. இந்தநிலையில் காட்டுயானைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை விடிய விடிய முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். அவசர தேவைகளுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

தொழிலாளர்களை விரட்டியது

இதேபோல் கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச்எண் 2-ல் இருந்து காவயல் ஒற்றைலைன் வழியாக மழவன்சேரம்பாடியை நோக்கி காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை அந்்த யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்த அறிந்ததும் சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர்கள் மாண்பன் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.


Next Story