பந்தலூர் அருகே வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள்- அரிசி, கோதுமைகளையும் தின்றது
பந்தலூர் அருகே வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள் அரிசி, கோதுமைகளை தின்றது.
பந்தலூர்
பந்தலூர் அருகே வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள் அரிசி, கோதுமைகளை தின்றது.
காட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிாி மாவட்டம் பந்தலூர் அருகே நீர்மட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் புகுந்து அடிக்கடி அட்டகாசம் செய்து வருகிறது. அதேபோல் சம்பவத்தன்று காட்டு யானைகள் நீர்மட்டம் பகுதியில் புகுந்தது. பின்னர் கந்தசாமி என்பவரின் வீட்டை முற்றுகையிட்டதோடு, வீட்டின் சுவரை இடித்து தள்ளியது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு, வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பிச்சென்று உயிர் தப்பினர்.
அரிசி, கோதுமைகளை தின்றது
இதையடுத்து அந்த யானைகள் வீட்டுக்குள் புகுந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை தின்றது. உயிர்தப்பிய கந்தசாமி மற்றும் குடும்பத்தினர் சத்தம் போட்டு கத்தினார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்ேபாது ஆவேசமடைந்த காட்டுயானைகள் பொதுமக்களை விரட்டியது. இதனால் அவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அந்த யானைகள், அரிசி, கோதுமைகளை தின்றதும் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
கண்காணிப்பில் வனத்துறையினர்
மேலும் சம்பவம் குறித்து அறிந்ததும் தேவாலா வனச்சரகர் ராம்குமார், வனவா ரவிச்சந்திரன், வனக்காப்பாளர் மோகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானைகள் சேதப்படுத்திய வீட்டை பார்வையிட்டனர். மேலும், கந்தசாமி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். இதையடுத்து நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.