பண்ணாரி அருகே ரோட்டில் சென்ற காரை மறித்து எட்டி உதைத்த காட்டு யானை


பண்ணாரி அருகே ரோட்டில் சென்ற காரை மறித்து எட்டி உதைத்த காட்டு யானை
x
தினத்தந்தி 23 Jun 2023 3:55 AM IST (Updated: 23 Jun 2023 2:07 PM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அருகே ரோட்டில் சென்ற காரை மறித்து காட்டு யானை எட்டி உதைத்தது

ஈரோடு

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அருகே வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த மலைப்பாதையை காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

திம்பம் மலைப்பாதையின் 1-வது ெகாண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று ரோட்டுக்கு வந்தது. யானையை கண்டதும் காரின் டிரைவர் ஓரமாக நிறுத்தினார். ஆனால் யானை திடீரென ஆவேசம் அடைந்து காரின் அருகில் வந்தது. பின்னர் அந்த காரின் டயரை எட்டி உதைத்தது. இதில் காரின் பக்கவாட்டு பகுதி சிறிது சேதம் அடைந்தது. இதில் சுதாரித்துக்கொண்ட டிரைவர், காரை சட்டென்று இயக்கி அங்கிருந்து வேகமாக தப்பி சென்றார். இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story