பேரையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் பலி- ஒருவர் படுகாயம்


பேரையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் பலி- ஒருவர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மதுரை

பேரையூர்,

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விபத்து

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60) விவசாயி. இவர் தன் நிலத்தில் விளைந்த பருத்தியை பேரையூரில் விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பேரையூர்-வத்திராயிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

எஸ்.பாறைப்பட்டி பகுதியில் சென்ற போது, மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (27), அவருடைய நண்பர் அருண் (23) ஆகிய 2 பேர் வந்தனர். திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

2 பேர் பலி

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேஷ், அருண் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வெங்கடேஷ் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அருணுக்கு பேரையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story