பெரியகுளம் அருகேபெண் சாவில் சந்தேகம் என போலீசில் புகார்
பெரியகுளம் அருகே பெண் சாவில் சந்தேகம் என அவரது தாய் போலீசில் புகார் கொடுத்தார்.
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை சுந்தர்ராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மனைவி லிபியா ரோஸ் (வயது 35). கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு லிபியாரோஸ் தனது தாய் எலிசபெத் ராணியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் லிபியா ரோசுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்ப்ட்டது. இந்நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக எலிசபெத் ராணி பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிந்துவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்துவும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.