பெருந்துறை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாய்க்காலில் குதித்து தற்கொலை


பெருந்துறை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாய்க்காலில் குதித்து தற்கொலை
x

பெருந்துறை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே தனியார் நிறுவன ஊழியர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

பெருந்துறை அருகே உள்ள பெரியவேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது46). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்த இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர், இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய மனைவி பிரேமாதேவி பெருந்துறையில் உள்ள நகைக்கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

தனியாக வீட்டில் இருந்த குருசாமி சைக்கிளில் பெருந்துறை ஈரோடு ரோட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். பின்னர் வாய்க்காலில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story