பெருந்துறை அருகேசூரிய கிரகணத்தின் போது தரையில் செங்குத்தாக நின்ற உலக்கை


பெருந்துறை அருகேசூரிய கிரகணத்தின் போது தரையில் செங்குத்தாக நின்ற உலக்கை
x

பெருந்துறை அருகே சூரிய கிரகணத்தின் போது தரையில் செங்குத்தாக உலக்கை நின்றது

ஈரோடு

சூரிய கிரகணம் ஏற்பட்டால் உலக்கைகள் எந்தப் பிடிமானமும் இன்றி தரையில் செங்குத்தாக நிற்கும் என்று நமது முன்னோர்கள் கூறி வந்துள்ளனர். அதன்படி சூரிய கிரகணமான நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாவிக்கடை அருகே டீக்கடை நடத்தி வரும் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது வீட்டின் முன்பு உள்ள சிமெண்ட் தளத்தின் மீது 5 அடி உயரம் கொண்ட உலக்கையை எவ்விதப் பிடிப்பும் இன்றி நிறுத்தி காட்டினார். செங்குத்தாக நின்ற அந்த உலக்கையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். காலை 7 மணி 10 நிமிடங்கள் முதல் மதியம் 12 மணி 30 நிமிடங்கள் வரை அந்த உலக்கை அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story