பெருந்துறை அருகே நிலத்துக்கு போலி பத்திரங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு


பெருந்துறை அருகே  நிலத்துக்கு போலி பத்திரங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை;  கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு
x

பெருந்துறை அருகே நிலத்துக்கு போலி பத்திரங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோாி கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனா்.

ஈரோடு

பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதியில் பாலசுப்பிரமணி, சோமசுந்தரம் உள்ளிட்டோருக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலி பத்திரங்கள் தயாரித்து உள்ளனர். அதற்கு பட்டா கேட்டு பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்கள். எனவே நிலஅளவையாளர்கள் சம்பந்தப்பட்டவர்களை அந்த நிலத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்தவர்கள் எங்களை தாக்கினார்கள். இதுதொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே சமூக வலைதளத்தில் எங்களது கிராமத்தை சேர்ந்தவர்களை பற்றியும், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை பற்றியும் தவறான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. எனவே போலி பத்திரம் தயார் செய்தவர்கள் மீதும், தவறான செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story