பெருந்துறை அருகே பெட்ரோல் பங்க்குகள்-தனியார் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


பெருந்துறை அருகே  பெட்ரோல் பங்க்குகள்-தனியார் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

பெருந்துறை அருகே 3 பெட்ரோல் பங்க்குகள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே 3 பெட்ரோல் பங்க்குகள் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மொட்டை கடிதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் நிர்வாக அலுவலராக சுரேஷ் கண்ணன் என்பவர் உள்ளார்.

இவருக்கு கடந்த 3-ந் தேதி பெயர், முகவரி இல்லாத மொட்டை கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், 'பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வருகிறது. உடனடியாக அந்த 3 பங்க்குகளையும் காலி செய்து அப்புறப்படுத்த வேண்டும்.

நாசமாகி விடும்

இல்லை என்றால் அந்தப் பங்க்குகளுக்கு எதிரே உள்ள தனியார் நிறுவனத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச்செய்து விடுவோம். குண்டு வெடித்தால் 3 பெட்ரோல் பங்க்குகள் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் நாசமாகிவிடும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இதையடுத்து நிர்வாக அலுவலர் சுரேஷ் கண்ணன், இதுபற்றி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க்குகளுக்கு மிரட்டல் கடிதம் வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story