பெருந்துறை அருகே மயங்கி விழுந்து வாலிபர் வாலிபர் சாவு


பெருந்துறை அருகே   மயங்கி விழுந்து வாலிபர் வாலிபர் சாவு
x

வாலிபர் சாவு

ஈரோடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மொளசியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சங்கர் (வயது 28), நந்தகோபால் (24) என 2 மகன்கள் உள்ளனர். சங்கர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நந்தகோபால் பெருந்துறை பவானி ரோட்டில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று தம்பியை தேடி சங்கர் பெருந்துறை வந்தார். பின்னர் கடைக்குள் சென்ற சங்கர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நந்தகோபால் உள்ளே சென்று பார்த்தார். அப்போது சங்கர் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சங்கர் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story