பெருந்துறை அருகே குடோனில் ரூ.25 லட்சம் மதிப்பிலான துணி பேல்கள் திருட்டு;


பெருந்துறை அருகே   குடோனில் ரூ.25 லட்சம் மதிப்பிலான துணி பேல்கள் திருட்டு;
x

பெருந்துறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான துணி பேல்கள் திருட்டு போனது.

ஈரோடு

பெருந்துறை

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த ஜவுளி நிறுவனத்தின் கிளை ஒன்று ஈரோடு, பார்க்ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த கிளையின் மேலாளராக சுரேஷ்குமார் (வயது 46) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

குஜராத்தில் இருந்து தயாராகி வரும் துணி பேல்களை, இருப்பு வைப்பதற்காக, இந்த நிறுவனத்தினர், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்தில் குடோன் ஒன்றை வாடகைக்கு பிடித்து உள்ளனர். அந்த குடோனில் குஜராத் நிறுவனத்தின் துணி பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி ஈரோடு கிளை மேலாளர் சுரேஷ்குமார் கருமாண்டிசெல்லிபாளையத்துக்கு வந்து, குடோனை திறந்து பார்த்து உள்ளார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள, 52 துணி பேல்களை காணவில்லை. குடோனின் பூட்டை உடைக்காமல், சாவி போட்டு பூட்டைத் திறந்து, துணி பேல்கள் திருடப்பட்டுள்ளது சுரேஷ்குமாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பெருந்துறை போலீசில் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, துணி பேல்களை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story