கம்பம் அருகேபலத்த காற்றால் வாழை மரங்கள் சேதம்:அதிகாரிகள் ஆய்வு
கம்பம் அருகே பலத்த காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்தன. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செவ்வாழை, நாழி பூவன், பச்சை வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் அண்ணாபுரம் பகுதியில் 2½ ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளார். இதில் ஊடுபயிராக சுமார் 5 ஆயிரம் நாழி பூவன் வாழையை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கம்பம், கூடலூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கம்பம் விவசாயி பயிரிட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இகுறித்து விவசாயி கொடுத்த தகவலை தொடர்ந்து நேற்று சேதம் அடைந்த வாழைகளை கம்பம் புதுப்பட்டி வி.ஏ.ஓ. சிவக்குமார், கம்பம் துணை தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story