புதுப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் சுடுமண்ணாலான விநாயகர் சிலை கண்டெடுப்பு


புதுப்பேட்டை அருகே  தென்பெண்ணை ஆற்றில் சுடுமண்ணாலான விநாயகர் சிலை கண்டெடுப்பு
x

புதுப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் சுடுமண்ணாலான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகனகண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் சுடுமண்ணலான விநாயகர் சிலை ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆறு பகுதியில் மேற்புற கள ஆய்வில் ஈடுபட்டபோது சுடுமண்ணாலான விநாயகர் சிலை கண்டறியப்பட்டது. இந்த விநாயகர் சிலை 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. சிலை இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் ஓட்டையும், துதிக்கை நீண்டும் உள்ளது. இரு கைகளில் உள்ள தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் குழந்தையை போன்று பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். இந்த சிலை சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.


Next Story