சாயர்புரம் அருகேசேர்வைகாரன்மடம் கோவில் கும்பாபிஷேக விழா


சாயர்புரம் அருகே சேர்வைகாரன்மடம் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைகாரன்மடம் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வினைதீர்க்கும் விநாயகர் கோவில், ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு நேற்று மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழா நேற்று காலை 6 மணிக்குமேல் மங்களஇசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையும், 12 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை புதுக்கோட்டை அரிகரசுப்பிரமணிய அய்யர் நடத்தி வைத்தார்.

பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆர்.கணேஷ் நாடார், கோவில் நிர்வாக சபை உறுப்பினர்கள் பி.ராமலிங்க நாடார், ஏ.வேல்துரை நாடார், பி. தங்கராஜா நாடார், பி. சுரேஷ் நாடார், எஸ்.லிங்கம் நாடார், மகா மண்டப திருப்பணி குழு உறுப்பினர்கள் பி அன்னபாண்டி நாடார், எஸ்.வேல்மயில் நாடார், வி.ஆதித்தன் நாடார், சி சின்னதம்பி நாடார், எஸ் மாடசாமி நாடார், டி.செந்தூர்மணிநாடார்,டி.சின்னத்துரை நாடார், சி.பாலமுருகன் நாடார், சி.சீமான்நாடார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story