சாயர்புரம் அருகே பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
சாயர்புரம் அருகே பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பேவர்பிளாக் சாலை
சாயர்புரம் அருகே நந்தகோபாலபுரத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமிஅறவாழி, துணைத் தலைவர் பிரியா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு சாயர்புரத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி
மேலும், ஆழ்வார்திருநகரில் சுற்று வட்டார பகுதி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிட திறப்பு விழா ஆழ்வார்திருநகரில் நடைபெற்றது. விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு நெல் விதைகளையும், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண்மை கருவிகளையும் இலவசமாக அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் கோதண்டராமன் மற்றும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருங்குளம்
இதேபோன்று, கருங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகை பை மற்றும் புத்தகம்உள்ளிட்ட கல்விஉபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. காமராஜர் நகரில் நடந்த விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் அசோகன், துணைத் தலைவர் மகாலிங்கம், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதய சங்கர், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார். விழாவில் காங்கிரஸ் நிர்வாகிகள், நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.