சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் பறிமுதல்


சாத்தான்குளம் அருகே  அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தாலுகா ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமம் பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கல் மற்றும் சரள்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்படப்படாமல் அதிக பாரத்துடன் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் தலைமையிடத்து துணை தாசில்தார் தாஹிர் அகமது, வருவாய் ஆய்வாளர் ஜெயா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராம பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது செங்குளம் விலக்கு அருகில் குண்டு கல் மற்றும் மண் அதிக பாரம் ஏற்றி வந்த 2 கனரக லாரிகளை கைப்பற்றி சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story